![jlk](http://image.nakkheeran.in/cdn/farfuture/5YGrLf7CqUdgsmgKrgiRhDG5nDdxsqZi89PeHRHD7Hc/1611070534/sites/default/files/inline-images/021.jpg)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள சில வியாபாரிகளுக்கு மினி வேன் மூலம் குட்கா மற்றும் பான்பராக் ஆகிய போதைப் பொருட்களைச் சிலர் கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வரப்பட்ட பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து வேலூர் மாவட்ட போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜனவரி 18 ஆம் தேதி இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் வேலூர் வடக்கு காவல்நிலைய அதிகாரிகள். வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் குறிப்பிட்ட அந்த வேனை மடக்கி காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் போதைப் பொருட்கள் இருந்ததை உறுதி செய்தனர். போதைப் பொருட்கள் கடத்தி வந்த வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மினி வேனை ஓட்டிவந்த ஹைதர் அலி மற்றும் அவருடன் வேனில் வந்த பர்தான் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 5 லட்சம் இருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர்.
குறைத்து மதிப்பிடுகிறார்கள் இன்னும் அதிகம் இருக்கும் என்கிற குரல்களும் எழும்பியுள்ளன.