Published on 12/10/2019 | Edited on 12/10/2019
திருநங்கை வேடமிட்டு கல்லூரி மாணவனிடம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விக்னேஷ் குமார், இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவருடைய கல்வி சான்றிதழ் மாயமானதால் பிரதி(duplicate) சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரி வாசல் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திருநங்கைகள் இரண்டு பேர் வந்து முகவரி கேட்பது போல் நடித்து விக்னேஷ் குமாரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைக் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து விக்னேஷ்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரட்டிப் பிடித்து இருவரையும் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய ஆனந்தன் என்கிற மணிகண்டன் என்பதும் அதே பகுதியில் வசிக்கக்கூடிய கனி என்கிற மணி என்பதும் இருவரும் திருநங்கை வேடத்தில் இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்