Skip to main content

“காத்திரமாகக் களமாடியவர்” - த.வெ.க. தலைவர் விஜய் புகழாரம்!

Published on 30/10/2024 | Edited on 30/10/2024
TVK President Vijay Praise for The one who roared fiercely

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2024) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் மு.க. ஸ்டாலின்,  பசும்பொன்னில் நடைபெற்று வரும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன் மற்றும் ராஜகண்ணப்பன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி த.வெ.க தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

TVK President Vijay Praise for The one who roared fiercely

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார், இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்”எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்