தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ.முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் அதிகாலை மூன்று மணியளவில் ரோந்துப் பணியிலிருந்தபோது சந்தேகத்திற்கிடமான மினி லாரி ஒன்று வந்தது. இதை மடக்கி சோதனையிட்டனர். அதில் காலி மதுபாட்டல்கள் வைக்கப்பட்டிருந்த டிரேக்களின் அடியில் 10 பிளாஸ்டிக் மூட்டைகள் சிக்கியது.
அதைப் பிரித்துப் பார்த்த போது உள்ளே விதையுடன் கூடிய இலைகள் சிக்கியது. சோதனையில் அது கஞ்சா என்று தெரியவந்தது. சுமார் 294 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு சந்தையில் 30 லட்சம் மதிப்பு என்று சொல்லப்படுகிறது. அவைகளோடு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர். வாகனத்தை ஓட்டி வந்த ஆத்தூரைச் சேர்ந்த டிரைவர் வெங்கடாச்சலம் கைது செய்யப்பட்டார்.
ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெருமளவு மதிப்புள்ள கஞ்சா சிக்கியது மாவட்டத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.