Skip to main content

டிடிவி அமைப்பின் கொடிக்கு தடை கேட்டு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வழக்கு

Published on 16/03/2018 | Edited on 16/03/2018


 

amma ttvd



அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பையும், அதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார் டிடிவி தினகரன். கொடியில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் வரிசையாகவும் அதன் நடுவில் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது. அதிமுக கொடியில் அண்ணாவின் படம் இருப்பது போல, டிடிவி தினகரனின் கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. 

 

இந்நிலையில் டிடிவி தினகரன் அமைப்பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிக்கு எதிராக, அதிமுக சார்பில் தடை கேட்டு இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். மற்றும் முதல்வர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

 

​    ​OPSEPS


 

இதில் தினகரன் அமைப்பின் கொடி அதிமுக கொடியை போலேவ கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் அடங்கி இருப்பதாகவும், கொடியின் நிறங்கள் இரண்டிலுமே ஒரே மாதிரி இருப்பதால் அது தொண்டர்களை குழப்பமடையச் செய்யும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமமுக அமைப்பின் கொடியை நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்