Skip to main content

வெளிநாடு செல்லும் முதல்வர், பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றது ஏன்? -டிடிவி தினகரன் கேள்வி

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

 

திருமண வரவேற்பு விழாவுக்காக திண்டுக்கல்லுக்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது...முதல்வர் வெளிநாடு பயணம் தமிழகத்திற்கு முதலீட்டை அதிகபடுத்தினால் நல்லது. அது தவறு இல்லை. ஆனால் இது அரசியலாக இருக்க கூடாது. ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது. 

 

t

 

ஆட்சி இருப்பதால் அதிமுக  மூட்டை போல உள்ளது.  அவிழ்த்து விட்டால் அது நெல்லிக்காய் மூட்டையா என தெரியும். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது பொறுப்புக்களை ஒப்படைக்காமல் சென்றது அவரது பயத்தினால் தான்.   அவரது கட்சியினர் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது. 

 

அமமுக கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம். அப்படி ஒரேசின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம்.  தமிழகத்தில் அரசாங்கத்தை மீறி காவல்துறை தனது பணியை செய்யவேண்டும்.  அவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். ஒபி எஸ் அணி - ஈபிஎஸ் அணி உள்ளங்களால் இணையவில்லை. 

 

ஏப்ரல்-மே மாதங்களில் தான் குடி மராமத்து பணிகளை செய்திருக்க  வேண்டும்.  காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட பின்பு குடி மராமத்து பணி நடப்பது என்பது சாத்தியமில்லாதது. இந்தியாவின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செயல்பட வேண்டும்.

 

 காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும்.  காஷ்மீரை மீட்க அதுபோல் கச்சத் தீவையும் மீட்டால் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

 

 பேட்டியின் போது திண்டுக்கல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர செயலாளர் இராமுத்தேவர், கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்  தங்கதுரை,  மேற்கு மவாட்ட செயலாளர் நல்லசாமி உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்