அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெ. மறைந்தபின் அதிமுகவில் ஏற்கப்பட்ட குழப்பத்தில் பல அணிகளாக பிரிந்தது. டி.டி.வி.தினகரன் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் வந்தது. இதில் டி.டி.வி.தினகரன் பின்னாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர். முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லையென 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்தனர். இதனால் சபாநாயகர் தனபால் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இருநீதிபதிகள், பின்னர் ஒருநீதிபதி என வழக்கை விசாரணை நடத்தி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனால் 18 தொகுதிகள் காலியானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 18 தொகுதி மக்களிடம், தங்கள் பக்கமுள்ள நியாயத்தை விளக்கும் பொருட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த வரிசையில் நவம்பர் 16ந்தேதி காலை குடியாத்தம் தனி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஜெயந்திபத்மநாபன் தலைமையில் குடியாத்தம் நகரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்பிரமணி, சோளிங்கர் எம்.எல்.ஏ பார்த்திபன் போன்றோரும் கலந்துக்கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாலை 4 மணியளவில் அமுமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துக்கொண்டு பேசும்போது, அமமுக கட்சியினர் போராட்டம், கூட்டம் நடத்த ஆளும் கட்சியினர் அனுமதி மறுப்பதற்க்கு காரணம் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், எப்போது தேர்தல் வரும் என தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அமைதி புரட்சி நடக்கும். இதை பாராளுமன்ற பொது தேர்தலிலேயே நீங்கள் பார்க்கலாம் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, கஜா புயலை எதிர்கொள்வதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகங்கள், அரசாங்கள் நன்றாக செயல்பட்டது. எதிர் கட்சியாக இருந்தாலும் சரியாக செயல்பட்டதால் சரியாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இது ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து தொய்வு இல்லாமல் பழைய இயல்பு வாழ்க்கை திரும்பி மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் நல திட்டங்களும், இப்பீடுகளும் அரசு பெற்றுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
அமமுக கட்சியினர் போராட்டம், கூட்டம் நடத்த ஆளும் கட்சியினர் மறுப்பதர்க்கு காரணம் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், எப்ப தேர்தல் வரும் என தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அமைதி புரட்டசி நடக்கும். இதை பாராளுமன்ற பொது தேர்தலிலேயே நீங்கள் பார்க்கலாம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக தான் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். ஜனவரி 25- வரை மேல்முறையீடு செய்ய காலம் உள்ளதால் ஜனவரியில் இடை தேர்தல் வராது. அதற்கு பிறகு தான் தேர்தலை அறிவிக்க வாய்ப்புள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு தான் வாய்ப்பு உள்ளது. நாங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்கள். அவர்கள் தீபாவளி தீபாவளிக்கு தான் தலைக்கு குளிப்பார்கள். கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக எடுத்ததால் அதிக உயிர் சேதங்களை தடுக்க முடிந்துள்ளது. இதை பெரிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்கபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். இதற்க்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
அம்மா ஆரம்பித்த டிவியை கபளீகரம் செய்ததாக கூறுகிறார்கள். அப்போது யார் இயக்குனராக இருந்தார்களோ இப்போதும் அவர்கள் தான் உள்ளனர். இதையும் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்யை இயக்குனராக போட்டிருந்தால் அதிலும் இணை, துணை ஆக்கி தூக்கிச்சென்றிருப்பார்கள்.
தற்போது ஈ.பி.எஸிம்- ஓ.பி.எஸிம் புதியதாக தொலைகாட்சி ஆரம்பித்துள்ளார்கள். அதை எப்படி ஆரம்பித்தார்கள் என வரும் காலத்தில் விரிவான ஆராய்ச்சிகள் நடைபெறும். அண்ணா திமுக என்ற வெறும் சொல்லுதான் அங்கு உள்ளது. இரட்டை இலை என்னும் சின்னம் தோல்வி சின்னமாக ஆகிவிட்டது. அது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருக்கும் போது வெற்றி சின்னம் தற்போது துரோகிகளிடத்தில் இருக்கும் போது தோல்வி சின்னம். தமிழக மக்களுக்கு வரமாக இருந்த சின்னம் இப்போது சாபமாக ஆகிவிட்டது என்றார்.