Skip to main content

இயலாமையால் வாடுவோருடன் தீபாவளி கொண்டாட்டம்  - ரஜினி ரவியின் நெகிழ்ச்சி விழா

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
r

 

ஏழை, பணக்காரன் என இருதரப்பினரும் தீபாவளி பண்டிகைக்கு தங்களால் முடிந்த அளவுக்கு புதுத்துணிகள் எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்தும் தங்களது குழந்தைகளுடன், குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் பிள்ளைகள் இல்லாதவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள், ஏதோ ஒரு சூழ்நிலையால் யாசகர்களாகிப்போனவர்கள், துணி எடுக்கவும், பட்டாசு வாங்கவும் வசதியற்றவர்கள் நாட்டில் லட்ச கணக்கில் உள்ளனர். அவர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுவார்கள்.

 

r

 

தீபாவளி கொண்டாட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் அவர்களைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. ஒருச்சிலர் முதியோர் இல்லத்துக்கும், ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்துக்கும் சென்று தீபாவளி கொண்டாடுகிறார்கள். முதியோர் இல்லத்தில், ஆதரவற்றோர் இல்லத்தில் சேரமுடியாதவர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என யோசித்து இந்த தீபாவளியை அவர்களுடன் கொண்டாடுவோம் என முடிவு செய்து களத்தில் இறங்கி, இயாலமையால் வாடும் 100 பேருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.

 

r

 

வேலூர் மாவட்டம், ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செவாக இருப்பவர் சோளிங்கர் ரவி. சோளிங்கர் நகரில் நரசிம்மர் கோயில், பெருமாள் கோயில் பகுதிகளில் யாருமற்ற அநாதைகளாக உள்ள யாசகர்கள், அநாதைகள், வயதானவர்களை தீபாவளிக்கு இரண்டு நாளூக்கு முன்பு சந்தித்து, உங்களுடன் தீபாவளி கொண்டாட விரும்புகிறேன் வாருங்கள் என அழைத்துள்ளார். அதன்படி கடந்த நவம்பர் 5ந்தேதி இரவு சோளிங்கர் டூ அரக்கோணம் சாலையில், நரசிம்மர் கோயில் அருகே திறந்தவெளி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தார்.

 

யாருமற்ற அநாதைகள்தானே என  ஏனோதானோ என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாமல் நேர்த்தியாக வருபவர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டு அவர்கள் அதில் உட்காரவைக்கப்பட்டனர். அதோடு, அவர்கள் அமர்ந்து உணவு உண்ண டேபிள்கள் போடப்பட்டன.  வந்திருந்தவர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு, இனிப்பு பெட்டி மற்றும் உணவு வழங்கினார் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவி. 

 

r

 

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ரவி, எங்கள் தலைவர் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வருடா வருடம், மாணவர்களுடனும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுடனும், ஆதரவற்றோருடனும் தீபாவளி கொண்டாடுவது வழக்கம்.  ஆனால் இந்த வருடம் உங்களுடன் கொண்டாட வேண்டும் என்று என் மனம் விரும்பியது. காரணம் இங்கே உள்ளவர்கள் அனைவரும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களும், உடலால் உழைக்க முடியாதவர்களும் தான். நீங்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் கூட நமக்கு யாருமில்லையே, அன்பு செலுத்த ஒரு உயிர் இல்லையே என மனதால் வாடி கண்ணீர் விட்டுக்கொண்டு இருப்பவர்கள். அதனால் தான் ஏதோ என்னால் முடிந்த வரை ஒரு பண்டிகையாவது நான் உங்களோடு உங்கள் மகனாகவோ, தம்பியாகவோ, உறவினராகவோ எங்கள் தலைவரின் சார்பில் கொண்டாட விரும்பினேன். பிரிவு என்பது எத்தனை துயரமானது என்பது நான் அறிந்தவன். நான் என் பெற்றோரை சிறு வயதிலேயே இழந்தவன் என நெகிழ்ந்தவர், இந்த தீபாவளியை நான் உங்களோடு சேர்ந்து கொண்டாடுவது என் அம்மா, அப்பாவோடு கொண்டாடியது போன்றொரு சந்தோசம் தருகிறது என்று கண்கலங்கினார்.

 

r

 

நிகழ்ச்சிக்கு பின்னர்  கலர் கலரான மத்தாப்பு, புஷ்வானம் போன்றவற்றை வந்திருந்தார்களூக்கு தந்து அவர்களை வெடிக்க வைத்து அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை ரஜினி மக்கள் மன்றத்தினரோடு அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பார்த்து நெகிழ்ந்தனர். இயலாதவர்களுடன் தீபாவளியை கொணடாடி மகிழ்ச்சிகரமாக்கி அவர்களை அனுப்பிவைத்தனர். 

 

r

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் நீதி (எ) அருணாச்சலம், மாவட்ட விவசாய அணி செயலாளர் கே. அருணகிரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் V.சிவா போன்றோர் கலந்துக்கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்பூசணியோடு விழிப்புணர்வு நோட்டீஸ் தந்த ரஜினி மன்ற மா.செ சோளிங்கர் ரவி! 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Rajini fan sholingar Ravi issues awareness notice with watermelon

 

கோடைக்காலம் தொடக்கம் என்பது ஏப்ரல் இறுதியில் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை இருக்கும். இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் கோடை கால நாட்கள் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் கடந்த பிப்வரி இறுதி முதலே தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

 

கோடைக் காலத்தை முன்னிட்டு தமிழகத்தை ஆளும்கட்சியான திமுக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுகவின் கிளைகழகத்தினர், மாநகர, நகர பகுதி, வார்டு கழக நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் குடிநீர் பந்தல் அமைக்க வேண்டும், அங்கு இளநீர், தர்பூசணி, மோர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனச்சொல்லி தொண்டர்களை களம் இறக்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுகவும் நகரப்பகுதிகளில் குடிநீர் பந்தல்களை அமைத்து மண்பானைகளில் குடிநீர் வைத்துள்ளது. 

 

மண் பானைகளில் குடிநீர் வைப்பதோடு, பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்குவது, மோர் வழங்குவதோடு, கோடைக்காலத்தில் பொதுமக்கள் எப்படியிருக்க வேண்டும் என்கிற துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி.

 

Rajini fan sholingar Ravi issues awareness notice with watermelon


இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழத் துண்டுகள், நீர்மோர் வழங்கிய சோளிங்கர் ரவி, கூடவே கோடைகாலத்தில் பெரியவர்கள் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும், உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்துகொள்ள வேண்டும், மாம்பழம், பப்பாளி பழம் அதிகம் உண்டால் உடல் வெப்பத்தை அதிகரிக்கும், காலையில் வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பத்தை குறைக்கும் போன்ற தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸையும் பொதுமக்களுக்கு தந்தார்.

 

இதுக்குறித்து நம்மிடம் பேசிய மா.செ சோளிங்கர் ரவி, “தண்ணீர், நீர்மோர், வழங்குவதோடு துண்டு பிரச்சுரம் வழங்கக்காரணம், மக்களிடம் கோடையில் இருந்து தங்கள் உடலை எப்படி காப்பது என்பது குறித்த விழிப்புணர்வில்லை. தமிழ்நாட்டில் அதிக வெப்பமாக உள்ள மாவட்டங்களில் முதன்மை இடத்தில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்றவை உள்ளன. கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் ரஜினி மன்றத்தின் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துண்டு பிரசுரம் வழங்குகிறோம். இதனை எங்கள் மன்றத்தினர், தலைவரின் ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

 

அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களோடு இருந்து வருகிறார்கள் என்றால் மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என இயங்குகிறார்கள். ரஜினி அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். ரஜினி மன்ற நிர்வாகிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு திமுக, அதிமுக, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மக்கள் அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

 

 

Next Story

சோளிங்கர் நகராட்சி! மோசடி செய்தவரின் குடும்பத்துக்கு பதவியா? 

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

Sholingur Municipality! Post to the family of the fraudster?

 

கடந்த உள்ளாட்சித் தேர்தல் வரை பேரூராட்சியாக இருந்த சோளிங்கர், தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் நகராட்சியாக மாற்றம் செய்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடத்திலும், அமமுக 4 இடத்தில், பாமக இரண்டு இடத்தில், அதிமுக, சுயேட்சை இரண்டும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

 

நகர மன்றத் தலைவர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட அவைத்தலைவர் அசோகன் தன் மனைவி தமிழ்செல்விக்கு சேர்மன் பதவியை தாங்கள் எனக் கேட்டுள்ளார். இந்த தேர்தலில் அவரும், அவரது மனைவியும் போட்டிப்போட்டு கவுன்சிலராகியுள்ளார். திமுக மெஜாரிட்டியாக இருப்பதால் சேர்மன் பதவியை கேட்கிறார்.

 

அசோகனுக்கு போட்டியாக 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோளிங்கர் நகர செயலாளர் கோபியின் தாயார் சுசீலாவும் எதிர்பார்க்கிறார். இவரது கணவர் மூர்த்தி ஏற்கனவே பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார்.

 

அசோகன், ஏற்கனவே நகர்மன்ற தலைவர் தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தவர். எம்.எல்.ஏ சீட் தரப்பட்டு தோல்வியை சந்தித்தவர். மக்கள் நம்பிக்கையை பெறாதவர். இதற்கு காரணம் 15 வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி கவுன்சிலராக அசோகன் இருந்தபோது, இவர் மீது புகார் வந்ததுள்ளது. அந்த புகாரில் இவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்போது சில பேரூராட்சி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட மோசடிகளால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தவர்.

 

மாவட்ட கழக அவைத்தலைவர் என்பதால் சேர்மன் பதவிக்கு அசோகன் மனைவியை தேர்வு செய்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காந்தி. துணை சேர்மன் பதவிக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் பழனியை தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள காங்கிரஸ் முனிரத்தினம், வைஸ் சேர்மன் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அமைச்சர் காந்தியிடம் கேட்டுள்ளார். எங்க கட்சிக்கு வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இது குறித்து தங்களது கட்சி தலைமை மூலமாக திமுக தலைமையை வலியுறுத்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை சென்றுள்ளார்கள் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸார்.

 

சேர்மன் பதவியை அசோகன் குடும்பத்துக்கு தரக்கூடாது, அதிமுக ஆட்சியின்போது அமைச்சரை திமுக நிர்வாகியாக இருந்து கொண்டு தனது ரியல் எஸ்டேட் கம்பெனி மூலமாக செய்தித்தாளில் விளம்பரம் தந்து வரவேற்றவர். இவரால்தான் சோளிங்கர் தொகுதியில் திமுக வளரவில்லை. அவர் மனைவிக்கு சேர்மன் பதவி தருவதை மறுபரிசீலனை செய்யுங்கள் என அமைச்சர் காந்திக்கும், திமுக தலைமைக்கும் புகார்கள் சென்றுள்ளன.