சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ஆனந்தராஜ்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ஜெயலலிதா சொன்ன பிறகு 50 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தேன். ஜெயலலிதா தேனீயைப்போல சிறுக சிறுக சேர்த்த ஓட்டுக்கள். பாமகவுக்கு 7+1 என்று யார் கொடுத்தார்கள். மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். அதனை எப்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு கொடுக்கலாம். வாக்களித்தது அதிமுகவுக்கு, பதவி தருவது வேறொரு கட்சிக்கா?
என்னைப்போல் அதிமுகவில் உழைத்தவர்கள் எத்தனைப் பேர் உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சிக்குள் இருப்பவர்களுக்கு தர வேண்டும். இது அதிமுக தொண்டர்களுக்கும், இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்கும் செய்யும் துரோகம்தானே.
பாமகவுக்கு தந்திருக்கிறார்கள். ஒருவேளை அன்புமணி தோற்றுவிட்டால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவரிடம் கொடுத்துவிடுவார்கள். அன்புமணி ஜெயித்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு யாருக்காவது கொடுத்துவிடுவார்கள். மருத்துவர் ராமதாஸோ அல்லது அன்புமணியோ இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எங்களது குடும்பத்தினருக்கு பயன்படுத்த மாட்டோம். எங்களது கட்சி தொண்டர்களுக்கு தருவோம் என்று சொல்ல வேண்டும். சொல்லுவாரா என்று தெரியவில்லை. கூட்டணி என்ற பெயரில் அதிமுகவின் வாக்கு வங்கி பிற கட்சிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.