Published on 23/02/2020 | Edited on 23/02/2020
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

இந்தியாவுக்கு முதன் முறையாக வரும் டிரம்ப் நாளை மற்றும் நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை பகல் 12.30 மணிக்கு அகமதாபாத் வரும் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கி உள்ளேன். இந்திய மக்கள் கண்டிராத மிகப் பெரிய நிகழ்வாக எனது பயணம் இருக்கும் என மோடி கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடி என்னுடைய இனிய நண்பர் எனவும் தெரிவித்துள்ளார்.