லாரி மோதி இன்ஜினியர் பலி
பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கமலாக்கர் (32). கந்தன்சாவடி சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை கமலாக்கர் பைக்கில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.
நேதாஜி நகர் மெயின்ரோடு வந்தபோது பின்னால் வந்த தனியார் தண்ணீர் லாரி கமலாக்கரின் பைக் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கமலாக்கர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து சேத்துப்பட்டை சேர்ந்த தண்ணீர் லாரி டிரைவர் ஜானகிராமன் (27) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.