கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கொள்ளையில் திருவாரூரில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். பின்பு முருகன் சம்மந்தப்பட்டிருப்பது தெரிந்த நிலையில், முருகன் பெங்களூரில் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி திருச்சி போலீசுக்கு போலீஸ் கஸ்டடி கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. கிட்டதட்ட 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசுக்கு கஸ்டடி கிடைத்தது.
அதிலும் 14 நாட்கள் போலீஸ் கஸ்டடி வேண்டும் என்று கேட்ட நிலையில், திருச்சி நீதிமன்றம் 7 நாள் கஸ்டடி கொடுத்தது. நீதிபதியிடம் முருகன் எனக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதால், டாக்டர் பரிசோதனையுடன் விசாரணை செய்ய சொல்லுங்கள் என்று கேட்க, அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் முருகன் எந்த வித பதட்டமும் இல்லாமல், லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட எங்களுக்கு நான்கு நாள் ஆனது. கொள்ளையடித்த நகைகளை எடுத்த பின் காரில் மதுரையிலுள்ள கணேசன் வீட்டிற்கு சென்றோம். அங்கு எடை மிஷின் வைத்து சுரேஷ் கணேசன் நான் ஆகியோர் நகைகளை பிடித்துக்கொண்டோம்.
பின்னர் நானும் சுரேஷும் காரில் நீடாமங்கலம் வந்தோம். நீடாமங்கலத்தில் சுரேஷ் இறக்கிவிட்டு நான் சென்னை கிளம்பினேன். இதனிடையே வரும் போது செல்போனில் பேசி மணிகண்டனை வரவழைத்தோம். சுரேஷ் பங்கு பிரித்த நகையுடன் மணிகண்டனின் பைக்கில் சென்றார். சென்னை செல்லும் வழியில் போலீஸ் சோதனை நடத்தினால் மாட்டிக் கொள்வேன் என்பதால் பெரம்பலூரில் வனப்பகுதியில் ஓரிடத்தில் நகைகளை மண்ணில் வைத்து புதைத்தேன். எப்போதும் மண்ணில் புதைத்து வைப்பது எனக்கு கைவந்த கலை. செலவுக்கு கொஞ்சம் நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
இதனிடையே போலீசில் மணிகண்டன் சிக்கி விட்டான். ஆனால் மணிகண்டன் உடன் வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டான். தடயமே இல்லாமல் கொள்ளையடிப்பது தான் எனது ஸ்டைல் மணிகண்டன் மட்டும் பிடிக்காவிட்டால், எனது லெவலே வேறு மாதிரியாக இருந்திருக்கும். தமிழ் சினிமா தயாரிப்பாளராக இருப்பேன். எனக்கு அரசியல் ஆசை உள்ளது. ஆனால் நேரடியாக அரசியலில் வெற்றி வெற்றிபெறுவது கடினம் என்பது எனக்கு தெரியும்.
அதனால் தான் நகை கொள்ளையில் ஈடுபட்டேன். இந்த நகைகளை வைத்து சினிமாவில் ஜெயித்து விட்டு, அதன் பிறகு ஏதாவது முன்னணி அரசியல் கட்சியில் சேர திட்டம் திட்டமிட்டிருந்தேன் மணிகண்டன் சிக்கி விட்டதால் வேறு வழியின்றி நானும் சரணடைய வேண்டிய நிலை. எனது அக்கா மகன் சுரேஷ் நடிகர் மாதிரி இருப்பார் அவரை நடிக்க திட்டமிட்டேன்.
தமிழ் சினிமா எடுப்பது சிரமமாக இருந்ததால், சுரேசை ஹீரோவாக வைத்து தெலுங்கில் 2 படம் எடுத்தேன். அது பெயிலியர் ஆகிவிட்டது. லலிதா ஜுவல்லரி நான் கொள்ளையடித்த நகைகளை சிலர் போலீசாருக்கு பங்கு கொடுத்துள்ளேன். நகைகளை வாங்கிய போலீசாரின் பெயர்களில் சொல்ல விரும்பவில்லை.
வேலூர் சிறையில் தான் எனக்கும் கணேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவன் நகைகளை உருக்கி விற்பதில் கில்லாடி. இதனால் அவனை பங்குதாரராக சேர்த்துக் கொண்டேன். ஏழைகளின் வீடுகளிலும் கடைகளிலும் திருட மாட்டேன் நகை கடைகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களில் தான் கைவரிசை காட்டினேன் என்று முருகன் விலாவாரியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.