திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா முன்னிலையில் திடக் கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சியின் மைய அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் வாங்குதல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களை தூய்மையாக பராமரித்தல் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்தல், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடை செய்தல் சாலையோர உணவகங்கள் மற்றும் உணவகங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாநகர் நல அலுவலர் மரு.எம்.யாழினி, பொன்மலைக் கோட்ட துணை ஆணையர் எம். தயாநிதி மற்றும் உதவி ஆணையர்கள், உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.