Skip to main content

ஊக்கை விழுங்கிய சிறுவன்; அறுவை சிகிச்சை செய்யாமலேயே நீக்கிய மருத்துவர்கள்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

Trichy boy problem; Cleverly corrected doctors

 

திருச்சியில் சிறுவன் ஒருவன் ஊக்கை விழுங்கிய நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யாமலேயே சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த  ஊக்கை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.

 

திருச்சி மாவட்டம் குண்டூர் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் இரண்டு வயது மகன் சேஃப்டி பின் எனப்படும் ஊக்கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது தெரியாமல் விழுங்கியதால் கத்தியுள்ளான். உடனடியாகச் சிறுவனை, திருச்சிராப்பள்ளி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடலை எக்ஸ்ரே எடுத்தபோது ஊக்கு தொண்டைப் பகுதியில் விரிந்த நிலையிலிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மருத்துவர்கள் ஸ்கோபி என்னும் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமலேயே தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை பத்திரமாக வெளியே எடுத்தனர். தற்போது சிறுவன் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்