Skip to main content

கோஷ்டி சண்டையில் அ.தி.மு.க. திருச்சி எம்.பி. தொகுதியை பறிகொடுத்த கதை! 

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

 

தமிழகத்தின் இதய பகுதி என்று வர்ணிக்கப்படும் திருச்சி அனைத்து இன மக்களும் ஒற்றுமைக்கு இலக்கணமான ஊர் என்று அனைவரும் அறிந்ததே. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் திருப்பு முனை அரசியலுக்கு திருச்சியையே தேர்ந்தெடுப்பார்கள்.. அ.தி.மு.க. அரசியல் வரலாற்றில் திருச்சியை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. ஆனால் ஜெ.வுக்கு ஸ்ரீரங்கம் பூர்வீகம் என்பதால் திருச்சி ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்பட்டது. எம்.பி. தொகுதியை பொறுத்த வரையில் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், பிஜேபி மட்டுமே தொடர்ச்சியாக வெற்றிபெற்றது. 

 

k

 

தி.மு.க. தஞ்சாவூர் கள்ளர் எல்.ஜியை களத்தில் இறக்கி வெற்றிபெற வைத்தது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு சசிகலா இளவரசியின் சம்மந்தி திருச்சி கலியபெருமாள் திருச்சியில் தங்கள் சமூகத்தில் ஒரு எம்.பி. வேண்டும் என்று ப.குமாரை அ.திமுக வேட்பாளராக நிறுத்தி தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற வைத்தனர். அ.தி.மு.க. எம்.பி.குமாருக்கு முன்பு எல்.ஜியை தவிர அனைவரும் மைனாராட்டி வகுப்பை சேர்ந்தவர்களே வெற்றிபெற்றிருந்தனர். 

 

இந்த நிலையில் அ.தி.மு.க. மா.செ.வாக இருந்த வெல்லமண்டி நடராஜன் உடல்நலக்குறைவால் மா.செ. பதவியை வேண்டாம் என்று சொல்ல ப.குமாருக்கு கூடுதலாக இந்த பதவியும் சேர்ந்து கொண்டதால் குமாரின் அதிரடி அரசியலில் அதிர்ச்சியடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். – துணைக்கு அமைச்சர் வளர்மதியை அழைத்துக்கொண்டு தொடர்ச்சியாக முதல்வரிடம் சுமார் 25 முறைக்கு புகார் கொடுத்து கொண்டே இருந்தார். அதன் விளைவாக இதுவரை மறைமுகமாக இருந்த கோஷ்டி பிரச்சனை நேரடியாக களத்தில் தெரிய ஆரம்பித்தது. வெளிப்படையாக கட்சியினர் இரண்டு பிரிவுகளாக பிரிய ஆரம்பித்தனர். 

 

v

 

இந்த இரண்டு பேரின் வெளிப்படையான சண்டையினால் மா.செ. குமார் புதிய நிர்வாகிகள் பதவி போட்டு எழுதி கொடுத்த பட்டியல் கடந்த வருடமாக அப்படியே நிலுவையில் இருக்கிறது. இதனால் கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமலே இருப்பது கட்சி தொண்டர்கள் இடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 

இதனால் திருச்சி கட்சியே இரண்டாக செயல்பட ஆரம்பித்தது. இதே நிலை தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் – கார்த்திக்தொண்டைமான் – ஓ.பி.எஸ். அணி என இரண்டு பெரிய கோஷ்யாக உருவெடுக்க ஆரம்பித்தது. தற்போது அடிதடி சண்டை வரை கொண்டு செல்லும் நிலையில் இருக்கிறது. 

 

இப்படி திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்ட அ.தி.மு.க.விலும் தலைதூக்கி நிற்கும் கோஷ்டி பூசல்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரை நிறுத்தினாலும் பெரிய சிக்கல் ஏற்படும் என்று உளவுத்துறை கொடுத்த சர்வே அடிப்படையில் அ.தி.மு.க. திருச்சி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்து பிஜேபி பக்கம் சாய்த்து விட்டது. தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்ற அதிமுக மா.செ. குமாரும் சீட்டு கொடுத்தால் நிற்கிறேன். இல்லை என்றால் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆகிற மனநிலையில் இருக்கும் போது தான். அ.தி.மு.க. தலைமைய திருச்சி எம்.பி. தொகுதியை பிஜேபியிடம் ஒப்படைத்தது. இவ்வளவு பெரிய கோஷ்டி பிரச்சனையில் பிஜேபி யாரை நிறுத்தினாலும் கட்டயா தோல்வி என்பதை உணர்ந்த பிஜேபி அதை வலுக்கட்டாயாக தே.மு.தி.க.விடம் தள்ளிவிட்டது. தே,மு.தி.க. வோ போட்டியிட வேட்பாளர் இல்லாமல் தடுமாறி வெளியூரில் இருந்து தர்மபுரி மருத்துவர் இளங்கோவன் என்பவரை கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்கள். 

 

தொடர் வெற்றியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியை அ.தி.மு.க. நிர்வாகிகளின் கோஷ்டி சண்டையில் திருச்சி தொகுதியை பறி கொடுத்து நிற்கிறது அ.தி.மு.க. இந்த மாதிரியான நேரங்களில் தான் ஜெயலலிதா போன்ற அதிகாரம் மிக்க கட்சி தலைமை இல்லை என்பதை அப்பட்டமாக உணர்கிறோம் என்கிறார்கள் கட்சியில் உள்ள தீவிரமான சீனியர் தொண்டர்கள். 

 

சார்ந்த செய்திகள்