தேடப்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த 7ம் தேதி திருப்பதியில் மீட்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று சிகிச்சை முடிந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் கரூர் ராஜேஸ்வரி கொடுத்த பாலியல் புகாரில் விசாரணை நடத்தி முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவெடுத்துள்ளனர். அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்காக சிகிச்சை முடிந்த நிலையில் முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு பின்னர் முகிலனை நாளை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாரின் மனுவுக்கு ஒப்புதல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.