Skip to main content

வயதான பெண்களை குறிவைக்கும் இளம் பெண்கள் - திருச்சி பகீர்!                

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
t

 

திருச்சியில் பலவிதங்களில் மக்களை ஏமாற்றி திருடிக்கொண்டடே இருக்கிறார்கள்.  தற்போது திருச்சியில் தனியே செல்லும் வயதானவர்களை குறிவைத்து இளம் பெண்கள் நகைகளை அபேஸ் பண்ணுவது தான் பேஷன் ஆகியிருக்கிறது. 

 

திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் திருவானைக்கோயில், சமுதாயம் செக்போஸ்டில் வசிக்கும் ஆண்டி என்பவரின் மனைவி மகாலெட்சுமி திருப்பூரில் உள்ள தனது மகள் நிர்மலா என்பவரின் வீட்டிற்கு ரயிலில் செல்வதற்காக, மதியம் 12.00 மணியளவில் திருவானைக்கோவில் செக்போஸ்ட் பஸ் ஸ்டாப்பில் டவுன் பஸ் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வந்து இறங்கி அதன் பிறகு மத்திய பேருந்து நிலையம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி சிங்காரத்தோப்பு பூம்புகார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கோட்டை ரயில் நிலையம் நோக்கி செல்வதற்காக ரோட்டை கடந்து போது, அவரின் பின்னால் வந்த மூன்று பெண்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு அந்த வயதானவர் திருப்பூர் செல்வதாக சொல்லியிருக்கிறார்.

 

try

 

 நாங்களும் ரயில் நிலையம் தான் செல்கிறோம் என்று கூறி, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு கோட்டை ரயில் நிலையம் செல்லாமல் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எறி செல்லலாம் என்று கூறி ரயில்வே ஜங்ஷனுக்கு அழைத்து சென்றவர்கள் ஆட்டோ ரயில்வே ஜங்ஷன் வந்ததும் அவர்கள் மகாலெட்சுமியை இறக்கிவிட்டு விட்டு அவர்களும் இறங்கி சென்றுவிட்டனர்.

 

பின்னர் மகாலெட்சுமி ரயில் நிலையம் சென்று திருப்பூருக்கு ரயில் டிக்கெட் எடுத்து கொண்டு ரயிலில் ஏறி உட்கார்ந்து ரயில் புறப்படும் போது அவர் கையில் வைத்திருந்த மணி பர்ச்ஸை ஜாக்கெட்டில் வைப்பதற்காக பார்த்த போது அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தாலி செயினை காணவில்லை என்பதை உணர்ந்தவுடன் அதிர்ச்சியடைந்தவர் உடனே கோட்டை காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 
தனிப்படை அமைக்கப்பட்டு உடனே விசாரணையை முடுக்கிவிட்டனர். 
 

இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டதில் மூன்று பெண்கள் மகாலெட்சுமியை பின்தொடர்ந்து வந்தது தெரிய வந்தது. அந்த மூன்று பெண்களின் புகைப்படத்தை வைத்து அவர்களை பிடிக்க தனிப்படையினர் தேடி வருகின்றனர். மேலும் மேற்படி புகைப்படத்திலுள்ள பெண்களை பற்றி தகவல் தெரிந்தால், திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவு தொலைப்பேசி எண்: 0431 - 2331939 ரூ  கைப்பேசி எண்: 94981-00615 மற்றும்  கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய தொலைப்பேசி எண்: 0431-2717832 மற்றும் காவல் ஆய்வாளர் கைப்பேசி எண்: 94420-62981 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், தனியே செல்லும் வயதான பெண்கள் தங்களது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார்.

 


 

சார்ந்த செய்திகள்