சேலம் மாநகரில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த மேம்பாலங்கள் அமைக்கும் பணி என்பது அண்ணா பூங்கா , நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு , சாரதா காலேஜ் வரை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் முதன் முறையாக இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.மற்றொரு புறம் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பால பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இந்த சாலையை முற்றிலும் முடக்க வேண்டும் ஆனால் அப்படி செய்யாமல் இதே சாலையில் வாகனங்கள் பயணிப்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை காண முடிகிறது. எனவே மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த மேம்பாலம் பணிகள் நடந்து வரும் சாலையை கடக்கும் போது அச்சத்துடன் மக்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது குறித்து சாலை போக்குவரத்து துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து பாலங்கள் அமைக்கும் பணிகளை கவனமுடன் கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி . சந்தோஷ் , சேலம்