வருவாய் துறையில் முக்கிய பொறுப்பு என்பது தாசில்தார் பணி தான். அப்படிப்பட்ட தாசில்தார்கள் 11 பேரை இன்று ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன். அவரின் உத்தரவின் பேரில் ஈரோடு வழங்கல் அலுவலரின் உதவியாளராக இருந்த பரிமளா என்பவர் ஈரோடு நகர தாசில்தாராகவும், ஈரோட்டில் தாசில்தாராக இருந்த ரவிச்சந்திரன் என்பவர் மொடக்குறிச்சிக்கும், தாசில்தார் துரைசாமி முத்திரைத்தாள் பிரிவுக்கும். மாசிலாமணி என்பவர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளரகவும்,கௌசல்யா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கவும்,பெருந்துறை தாசில்தாரா இருந்த முத்துகிருஷ்ணன் ஈரோடு ஆர்.டி.ஓ வின் நேர்முக உதவியாளராகவும் செந்தில்ராஜா கோபி தாசில்தாராகவும் சிவசங்கர் என்பவர் பவானி நத்தம் செட்டில்மென்ட் தாசில்தாராக, விஜயகுமார் மற்றும் ஸ்ரீதர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று எல்லோரும் புதிய இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஈரோடு தாசில்தாராக திருமதி பரிமளா பணியாற்ற தொடங்கினார்.
பொதுமக்களிடம் எளிமையாக நேரில் பழகி அரசின் சலுகைகள், நல திட்டங்களை மக்களுக்கு சேர்ப்பதோடு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பது தான் தாசில்தார்களின் பொறுப்பான பணி என்று புதிய பணியிட தாசில்தார்களுக்கு கலெக்டர் கதிரவன் ஆலோசனை வழங்கினார்.