Skip to main content

குமரியில் வீசும் பலத்த காற்றினால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
குமரியில் வீசும் பலத்த காற்றினால்
 ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!



கன்னியாகுமரியில் வீசும் பலத்த புயல்காற்று காரணமாக அங்கிருந்து புறப்படும் ரயில்களும், கன்னியாகுமரி வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகர்கோவில் உள்ளிட்ட கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் பலத்த புயல்காற்று வீசி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின்சார ரயில்கள் செல்லும் வயர்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புனலூர்-கன்னியாகுமரி பயணிகள் ரயில் (56715) நெய்யாற்றக்கரை-கன்னியாகுமரிக்கு இடையே இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம்-சென்னை எழும்பூர் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (16724) கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் (16723) திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி-திருவனந்தபுரம் (22627), திருவனந்தபுரம்-திருச்சி (22628) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

- ஷாகுல்

சார்ந்த செய்திகள்