Skip to main content

‘சொல்ல வேண்டியதுதானே அங்கு பாதையில்லை என்று?’ - லாரியால் சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Traffic jam on Kulithalai-Manapparai road near Karur

 

கரூர் அருகே குளித்தலை - மணப்பாறை செல்லும் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி ஒன்று பிரேக் டவுன் ஆனதால் நள்ளிரவு 12 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் மணப்பாறை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து பருத்தி பேரல்களை ஏற்றிக்கொண்டு மணப்பாறை செல்வதற்காக வந்த லாரி ஒன்று ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது ரயில்வே கேட் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள உயரத் தடுப்பில் செல்ல முடியாமல் மீண்டும் பின்னால் லாரியை எடுக்க முயன்றபோது கிளட்ச் கட்டாகி பிரேக் டவுன் ஆகி அங்கேயே நின்றது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

 

மேலும்  வாகனங்கள் செல்ல முடியாமல் தட்டுத் தடுமாறிச்  செல்லும் சூழல் உருவானது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த  இரயில்வே கேட்டின் அருகே கடந்த சுமார் 10 மணி நேர அவதிக்குப் பிறகு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு பின்னர் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதற்குப் பின்னர் போக்குவரத்து சீரானது.

 

 

சார்ந்த செய்திகள்