Skip to main content

போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் தொழிற்சங்கங்கள் பேரணி (படங்கள்)

Published on 19/12/2023 | Edited on 19/12/2023

 

2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணிக்கு வந்த புதிய தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. மற்றும் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்; 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிவு செய்ய வேண்டும்; மேலும் கான்ட்ராக்ட் அடிப்படையில் தொழிலாளர்களை நியமனம் செய்யக்கூடாது; போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லவன் இல்லத்தில் ஊர்வலமாகச் சென்று மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கும் பேரணி நடத்தினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், வட சென்னை மக்களவைத் தொகுதியில், அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில், இன்று (16-04-24) வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ராயபுரம் மனோ வந்த வண்டியின் பின்னால், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வேடமணிந்த ஒருவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு முன்னால், தாரை தப்பட்டையுடன் ஆண்களும், பெண்களும் ஆடிக்கொண்டே வந்தனர். 

 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

Next Story

தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதன்படி, இன்று (03-04-24) காலை தென்சென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்