
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி. சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் இன்று காலை ஓட்ட பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேற்குறிப்பிட்ட மூவரும், இன்று காலை 7.30 மணியளவில் திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து புறப்பட்டு, காஜாமலை வழியாக, கே.கே.நகர் முதல் எல்.ஐ.சி. காலனி ஆர்ச் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மேற்குறிப்பிட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள், ‘இந்த ஒட்டத்தின் நோக்கம் காவல்துறையில் உள்ள அனைவரும் நிச்சயம் ஒரு மணிநேரம் ஓட்டம்; அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே’ எனத் தெரிவித்தனர். இதுபோன்ற உடற்பயிற்சியால் உடலும் மனமும், வலிமை பெறும், மன உளைச்சல் இல்லாமல் பணியாற்றலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.