Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 26.01.2019

Published on 26/01/2019 | Edited on 26/01/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்
26-01-2019, தை 12, சனிக்கிழமை, சஷ்டி திதி மாலை 04.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 03.04 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. வாஸ்து நாள் காலை 10.46 மணி முதல் 11.22 மணி வரை
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

mesham

                                                                                   மேஷம்


இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
 

 

 

reshabam

                                                                                     ரிஷபம்

 

இன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

3

                                                                                  மிதுனம்

 

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
 

kadagam

                                                                                     கடகம்


இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

5

                                                                                   சிம்மம்


இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்

 

kannirasi

                                                                                     கன்னி

 

இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.
 

thulam

                                                                                    துலாம்


இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
 

 

viruchagam

                                                                             விருச்சிகம்

 

இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

danush

                                                                                      தனுசு


இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
 

 

magaram

                                                                                     மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
 

kumbam

                                                                                      கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை

 

meenam

                                                                                      மீனம்

 


இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
 

 

சார்ந்த செய்திகள்