Skip to main content

வறட்சி நிவாரணமே விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை! புயல் நிவாரணத்தையாவது கொடுங்க!! கலெக்டரிடம் முறையிட்ட திமுக எம்எல்ஏ!!

Published on 23/11/2018 | Edited on 23/11/2018

திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிதான் விவசாயம்  நிறைந்த பூமியாக இருப்பதால்தான் தமிழ் நாட்டிலேயே இரண்டாவது காய்கறி மார்க்கெட்டாகவும் ஒட்டன்சத்திரம் இருந்துவருகிறது. 

       

அதுபோல் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் மக்காசோளம், முறுங்கை, கண்வல்லிகிழங்கு, தக்காளி, மொச்சை, மிளகாய்,வெங்காயம்,பாசிபயிறு,சோளதட்டை, வெண்டைக்காய்  உள்பட பல விவசாய பொருட்களை பயிரிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு  அனுப்பி வைத்து அதன்மூலம் வரும் வருமானத்தை கொண்டு வயிற்றை கழுவி வருகிறார்கள்.

 

      

 Drought relief is not given to the farmers! Give Storm Relief !! MLA appealed to Collector

 

இந்த நிலையில்தான் திடீரென ஏற்பட்ட  கஜா புயலால் பொருளூர், தேவத்தூர், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கம்பட்டி, லக்கையன்கோட்டை, நால்ரோடு, இடையகோட்டை, கள்ளிமந்தையம்,அம்பிளிக்கை உள்பட 100க்கு மேற்பட்ட ஊர்களில் விவசாயம் செய்திருந்த பயிர்வகை விவசாயங்களும், பயிருக்காக அமைக்கப்பட்ட பந்தலும் கஜா புயலின் கோரதாண்டவத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்தது.

 

 

அது போல் இப்பகுதியில் அதிகம் விளைய கூடிய மக்காசோளம் மற்றும் வாழை, தென்னை, சோளம், மாட்டுதீவனத்திற்கு போடப்பட்ட தட்டைகள் உள்பட பெரும்பாலான விவசாயமும் பெரும் சேதம் ஏற்பட்டு சாய்ந்து மண்ணொடுமண்ணாகவும் விழுந்துவிட்டதைக் கண்டு விவசாயிகள் மனம் நொந்து விட்டனர்.

 

      

இப்படி கஜா புயலால் தொகுதியில் உள்ள விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் ஆளும் கட்சியினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்தும் மெத்தன போக்கவே கடைபிடித்து வந்தனர். ஆனால் தொகுதி திமுக  எம்எல்ஏவும் கொறடாவும்மான சக்கரபாணியோ உடனே  கஜா புயலால் பாதிக்கப்பட்டு  வீடு வாசலை இழந்து நிற்கும் மக்களுக்கு  ஆறுதல் கூறி தன்னால் முடிந்த முதல் உதவிகளையும் செய்து விட்டு இரவு பகல் பாராமல்  விவசாயிகளை சந்தித்ததுடன் மட்டும்மல்லாமல்  சேதம் அடைந்த விளைநிலங்களுக்கே பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன்  சென்று  அந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி  நிவாரண நிதி  உதவிகள் வாங்கி தருவதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதி அளித்தும் இருக்கிறார். அதன் அடிப்படையில்தான்  உடனே மாவட்ட கலெக்டர் வினையிடமும் மனு கொடுத்திருக்கிறார்.

 

      

 Drought relief is not given to the farmers! Give Storm Relief !! MLA appealed to Collector

 

 

இதுபற்றி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற மன்ற உறுப்பினரானரும்.கொறடாவும்மான சக்கரபாணியிடம் கேட்ட போது......இந்த கஜா புயலால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட  மக்காசோளம் பயிர்கள் ஒட்டு மொத்தமாகவே  சேதம் அடைந்து உள்ளது. அதுவும் இந்த பயிரில் படைப்புழு தாக்கியதால் அதை ஒழிக்க ஒவ்வொரு விவசாயியும் பல ஆயிரங்கள் செலவு செய்து நான்கு முறை மருந்து அடித்து பயிர்களை காப்பாற்றி வந்த நேரத்தில்தான்  இந்த புயலால் அந்த மக்காசோளம் பயிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அதுபோல் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற விவசாயத்தையும், வீடுகளை இழந்து நிற்கும் மக்களையும் கணக்கு எடுத்து மாவட்ட கலெக்டரை(வினைய் )நேரில் பார்த்து உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறினேன்.

 

 

அதோடு பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 75 சதவீத விவசாயிகள் ஒரு ஏக்கர் மக்காசோளத்திற்கு 170 ரூபாயும், பருத்திக்கு 920 என ஒவ்வொரு பயிருக்கும் காப்பீடு திட்டத்திற்கு விவசாயிகள் பணம் கொடுத்தும் கூட அந்தந்த பகுதியில் இருந்த விவசாய அதிகாரிகள் சரி வர ரசீது தராமல் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

 

அதன்பின் 2016 ஆம் ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவித்தும் கூட இரண்டு ஒன்றியங்களில் உள்ள  விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் மக்காசோளத்திற்கு 12 ஆயிரமும், அதுபோல் மற்ற பயிர்களுக்கும் கணக்கு போட்டு வறட்சி நிவாரண நிதி கொடுக்கிறோம் என்று சொல்லி அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயருக்கு கொடுத்துவிட்டு 80 சதவீதம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியே கொடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரும்நஷ்டம் அடைந்தனர்.  இதைப்பற்றி அப்பொழுதே சட்டமன்றத்தில் பேசி பதிவு செய்தும் இருக்கிறேன். 

 

அப்படி வறட்சி நிவாரண நிதியே விவசாயிகளுக்கு இந்த அரசு கொடுக்க வில்லை. அதுபோல் இந்த புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நிவாரணம் என்ற பெயரளவில் கொடுக்காமல் தொகுதியில் பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும்  நிவாரண நிதியை முழுமையாக வழங்கவேண்டும். அதுபோல் வீடுகளை இழந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை கலெக்டரிம் உட்கார்ந்து தெள்ளத் தெளிவாக சொல்லி எந்தெந்த ஊரில் எத்தனை ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கிறது  என்பதையும் அதுபோல்  இடிந்த வீடுகளின் பட்டியலையும் கணக்கு போட்டு கலெக்டரிம் கொடுத்திருப்பதால் என் தொகுதி மக்களுக்கு நிவாரண நிதி முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்