Skip to main content

திட்டமிட்டபடி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

tNPSC as planned Choices!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., இன்று (06/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.032 நாள் 06.01.2022- ல் ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்வாணையத்தினால் ஏற்கனவே 08/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல், 09/01/2022 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தப்படுவதாக இருந்த கீழ்க்கண்ட எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

அதன்படி, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை/ திட்ட உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 08- ஆம் தேதி அன்று முற்பகல் 10.00 மணி முதல் 01.00 மணி வரையும், பிற்பகல் 03.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெறும். ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகள் ஜனவரி 9- ஆம் தேதி அன்று முற்பகல் 10.00 மணி முதல் 01.00 மணி வரையும், பிற்பகல் 03.00 மணி முதல் 05.00 மணி வரையும் நடைபெறும்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்