Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- கைதானோர் எண்ணிக்கை உயர்வு! 

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   


இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக, குரூப் 4 தேர்வில் 19 பேர், குரூப் 2ஏ தேர்வில் 19 பேர், விஏஓ தேர்வில் 2 பேர் என 40 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tnpsc exams issues 40 persons arrested cbcid police

அதன் தொடர்ச்சியாக 2016- ஆம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் இளையான் குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த தேர்விலும் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 2016- ஆம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக நெல்லை படலையார்குளம் விஏஓ பன்னீர்செல்வம், திருவள்ளூர் பனையஞ்சேரி விஏஓ செந்தில்ராஜ் ஆகிய இருவரும் இன்று (10/02/2020) கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயக்குமாரிடம் இருவரும் தலா ரூபாய் 7 லட்சம் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


அதேபோல் குரூப் 4 முறைகேடு வழக்கில் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் கூட்டாளிகளான கார் ஓட்டுனர்கள் கார்த்திக், செந்தில்குமார், சாபுதீன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் சென்னைக்கு குரூப் 4 விடைத்தாள்களை ஏற்றி வந்த வாகனங்களை 3 பேரும் இயக்கியுள்ளனர். விடைத்தாள்களை ஜெயக்குமார் எடுத்துச்செல்லும் போது வாகன சோதனை நடக்கிறதா என மூன்று பேரும் கண்காணித்ததாக சிபிசிஐடி வட்டார தகவல்கள் கூறுகின்றனர். மேலும் கைதான ஓட்டுனர்கள் 3 பேரிடம் 2 கார்களையும் பறிமுதல் செய்துள்ள போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்