Skip to main content

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் உத்தரவு

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

tn govt  ordered to increase allowance to 4 percent for government employees and teachers.

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

அரசு அலுவலகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2,366 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்