Published on 14/05/2020 | Edited on 14/05/2020
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. கரோனா பாதிப்பில் 8 ஆம் இடத்திலிருந்து 2 ஆம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. முன்னேற்றத்தில் முதலிடம் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.