Published on 20/02/2020 | Edited on 20/02/2020
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) பேரவையில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது" என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், "11 எம்.எல்.ஏக்கள் விவகாரம் என்னுடைய ஆய்வில் உள்ளது; என்னை யாரும் வற்புறுத்த முடியாது" என்றார்.