புதுச்சேரி விடுதி அருகே நடைபயிற்சியில்
அதிமுக-வில் பிளவுபட்டுக் கிடந்த இரு அணிகளும் இணைந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஓபிஎஸ் துணை முதல் அமைச்சராகவும், மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் நேற்று காலை ஆளுநரை சந்தித்தனர். அப்போது அவர்களது ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லையென ஆளுநரிடம் கடிதமாக தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பின் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரிக்கு அருகே இ.சி.ஆர். சாலையில் உள்ள சின்ன வீரம்மாபட்டிணத்தில், ஒயிண்ட் ப்ளவர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி விடுதி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
டி.டி.வி ஆதரவு எம்.எல்.ஏக்கள்.!