போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்கும் அரசாணைகளை திரும்ப பெறக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் அரசாணைகளை திரும்ப பெறக்கோரி டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தவறிழைக்கும் வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிக்க எந்த சட்டமும் இல்லை. சட்டப்படி வாகன ஓட்டிக்கு முதலில் நோட்டீஸ் கொடுத்து அதற்கு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். ஆனால் தன் தரப்பு நியாயத்தையோ, நிரபராதி என்பதையோ நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது சட்டவிரோதமானது என்று கூறயுள்ளார்.
இந்த மனுவை வெள்ளியன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, இது பொது நல வழக்கு அல்ல எனவும், உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சி.ஜீவா பாரதி