டி.டி.வி. தினகரன் கொடும்பாவி எரிப்பு
விருத்தாசலத்தில் தினகரன் மற்றும் எம்.எல்.ஏ கலைச்செல்வன் கொடும்பாவியை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் அதிமுகவினர்.
கடலூர் மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சில நாட்களுக்கு முன்பாக தினகரன் நீக்கினார். விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வனை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்தார். தினகரனின் இந்த செயலுக்கு மாவட்டத்தில் அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் விருத்தாசலம் மாவட்ட செயலாளர் நியமனத்தை வாழ்த்தி விருத்தாசலத்தில் எம்.எல்.ஏ கலைச்செல்வனின் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். இன்று காலை பாலக்கரை ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த பேனரை அதிமுக இளைஞர்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.டி.ஆர்.ரமேஷ் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். மேலும் தினகரன் மற்றும் கலைச்செலவன் ஆகியோரது கொடும்பாவிகளை கொளுத்தி போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தினகரனையும், கலைச்செல்வனையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
- சுந்தரபாண்டியன்