திருவண்ணாமலை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 28 ஆம் தேதி இரவு வெள்ளித்தேரும் 29 ஆம் தேதி மகா ரதமும் அதனையடுத்து டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலினுள் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகள் செய்ய இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் ஆசியாவிலேயே 2 வது மிக உயரமான ராஜ கோபுரத்தின் முன்பு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
- து. ராஜா.