Skip to main content

திருப்பதி லட்டில் சர்ச்சை; நெய்யை வைத்து நடக்கும் அரசியல்!

Published on 21/09/2024 | Edited on 21/09/2024
Tirupati Laddu Controversy A.R. DAILYFOOD (B) LIMITED COMPANY Test

திண்டுக்கல் மதுரை சாலையில் 25 வருடங்களுக்கு மேலாக ஏ.ஆர். டெய்லிஃபுட் (பி) லிமிட் நிறுவனம் மூலம் ராஜ் பால் மற்றும் நெய் உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் திருப்பதி உள்பட வெளிமாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலைகள் தான் திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பிய நெய்ல்தரமில்லாமல் கொழுப்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு சுமத்தியதோடு மட்டுமல்லாமல் பிளாக் லிஸ்டலையும் இந்த நிறுவனத்தைக் கொண்டு வந்தனர்.

இது சம்பந்தமாகத் திண்டுக்கல் ஏ ஆர் நிறுவனத்தின்  தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் கூறும் போது, திண்டுக்கல் ஏ ஆர் நிர்வாகத்தின் நபராக நான் முன்பு நின்று பேசிக் கொண்டு வருகிறேன். தேவஸ்தானத்திற்கு  ஜூன் ஜூலை என இரண்டு பாகங்கள் தொடர்ச்சியாக நெய் அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. ஆனால் தற்போது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி செய்தி வருகிறது. எங்களுடைய தயாரிப்பில் குறை இருக்கிறது என்று நினைக்கும் பட்சத்தில் இருந்தால் எங்களது நெய் எல்லா இடத்திலும் உள்ளது அதனை ஆய்வு செய்யலாம். அதன் தரத்தை எந்த குறைபாடுகளும் இல்லை. எங்கள் நிறுவனத்தின் மீது தொடரப்படும் குற்றங்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக எங்களது நிறுவனத்தின் பொருள்களை செக் செய்து கொள்ளலாம். 25 வருடத்திற்கு மேல் இந்த துறையிலிருந்து வருகிறோம். இந்த போன்று எங்களது பொருட்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்தினது கிடையாது. இதுதான் எங்களின் விளக்கம். எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்றனர்.

Tirupati Laddu Controversy A.R. DAILYFOOD (B) LIMITED COMPANY Test

ஏ.ஆர். தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி கண்ணன், “ எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது. அங்குச் சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம். எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டுத் துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம். லட்டு தயாரிப்புக்காகவே நெய் அனுப்பப்பட்டது. அங்கு ஒப்பந்தம் போடப்பட்டு நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய பல பேர் உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் 99 சதவீதம் வெளியில் தான் வாங்கி வருகிறார்கள்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறைகள் இல்லை என வந்துள்ளது. எங்களிடம் எங்களது ஆய்வுக்கான அறிக்கைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வறிக்கைகளும் உள்ளன.உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து திண்டுக்கல் மாசுக் கட்டுப்பாடு அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏ.ஆர் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அத்தோடு, மத்திய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பிலும் ஏ.ஆர் நிறுவனத்தில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Tirupati Laddu Controversy A.R. DAILYFOOD (B) LIMITED COMPANY Test

இது சம்பந்தமாக ஏ.ஆர். டெய்லி ஃபுட் (பி) லிமிட் உரிமையாளர் ராஜசேகரிடம்  கேட்டபோது, “நாங்கள் அனுப்பிய நான்கு லோடு நெய்க்கு  உண்டான பணம் தேவஸ்தானத்தில் இருந்து ஏற்கனவே பெற்றுவிட்டோம். அப்படி இருந்தும் இரண்டு மாதத்துக்கு முன்பு நாங்கள் அனுப்பிய நெய் தரமில்லை என்று சொன்னார்கள். அதை நாங்களே ஆய்வு செய்யச் சொன்னோம். அத்துடன் நாங்கள் அனுப்பிய  நெய் தரமாகத் தான் இருக்கிறது என்று ரிப்போட்டும் கொடுத்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து தான் மற்ற ஆய்வுகளும் நடந்து  பிரச்சனையே பூதாகரமாக வெடித்தும் இருக்கிறது.  நெய்யை வைத்து அரசியல் நடத்தி வருகிறார்கள்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்