Skip to main content

திருச்சி உதவி கமிஷனர் 50 ஆயிரம் லஞ்சம் வழக்கில் கைது

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

tt

 

திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருப்பவர் அருள் அமரன். திருச்சியில் கண்டோன்மெண்ட் க்ரைம் ஏ.சி.யாக இருந்தவர். பண விவகாரங்களில் சிக்கி சில காலம் தஞ்சை பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர். மீண்டும் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி திருச்சியில் பெரிய பணப்புழக்கம் உள்ள குற்றபிரிவுக்கு உதவி ஆணையராக பொறுப்பேற்றார். அதன் பிறகு இவருடைய செல்வாக்கு பெருமளவு உயர்ந்தது. 

 

திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரியல் எஸ்டேட் பிரச்சனையில் அருள் அமரன், சீத்தாராமன் என்பவரிடம் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் அருள் அமரனை கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திருச்சியில் 4 முக்கிய இடங்களில் சோதனையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்