Skip to main content

டி.எம்.எஸ் வளாகத்திற்குள் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி!

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
டி.எம்.எஸ் வளாகத்திற்குள் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி!



ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3வது நாளாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் செவிலியர்கள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க 3 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதில் கடும் அதிருப்தியடைந்த பத்திரிக்கையாளர்கள் இன்று காவலர்களிடம் தங்களை உள்ளே அனுமதிக்கமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையை காவல்துறையினர் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டிஎம்எஸ் வளாகத்திற்குள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஊடகங்களின் செய்தியாளர்களும் டிஎம்எஸ் வளாக நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுனர். தொடர் போராட்டத்தையடுத்து தற்போது செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்