Published on 02/04/2018 | Edited on 02/04/2018
வரும் 7ஆம் தேதி ஆரம்பமாகும் 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை 10 ஆம் தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக களத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த சென்னை அணி தற்போது மீண்டும் களமிறங்க இருப்பதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்திலுள்ளனர்.
மேலும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதனால் சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை நிலையத்தில் இன்று கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் அலைபாய்ந்தது. மொத்தம் 32 ஆயிரம் இருக்கைகளில் 6 ஆயிரம் இருக்கைகள் ரசிகர்களுக்கு ஒதுக்கபட்டுள்ளது.
1300 ரூபாய் விலையுள்ள அடிப்படை டிக்கெட் இன்று விற்கப்படுகிறது. டிக்கெட் வாங்கவந்த ரசிகர்கள் கூட்டம் வாலாஜா ரோடு வரை வரிசைகட்டி நிற்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.