Published on 03/11/2019 | Edited on 03/11/2019

விழுப்புரம் அருகே இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் இடி தாக்கியதில் நித்யா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த செல்வநாயகி உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.