Published on 13/08/2022 | Edited on 13/08/2022
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது.
உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார். லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவர் திரும்பிய போது, அங்கிருந்த பா.ஜ.க.வினர் அமைச்சரின் காரை மறித்து காலணி வீசினர்.
வீரமரணமடைந்த ராணுவ வீரருக்கு அரசின் சார்பாக, அமைச்சர் அஞ்சலி செலுத்திய பிறகே, பா.ஜ.க.வினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் எழுந்த பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையே, காலணி வீச்சுத் தொடர்பாக, ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.