Skip to main content

சிந்தனைக்குரிய மொழி தமிழ்மொழி! -லதா சரவணன் நூல் வெளியீட்டில் கொடைக்கானல் காந்தி முழக்கம்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

எழுத்தாளர் லதா சரவணனின் ஐந்து குறுநாவல்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்தது. 

சோனியா ஹெலன் கணீர்க் குரலில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நூலை நேசம் பதிப்பக உரிமையாளர் கலைமாமணி பாண்டிச்செல்வன் வெளியிட, முதற்படிகளை லதா சரவணனின் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். அடுத்தடுத்த படிகளை எழுத்தாளர் லதா, கவிஞர்  ஜானு இந்து ஆகியோர்  பெற்றுக் கொண்டனர். 

 

Thoughtful language Tamil! Kodaikanal Gandhi in Lata Saravanan book release function

 

விழாவிற்குத் தலைமை தாங்கிய  கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், ”ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் நசுக்கப்பட்டவர்களுக்காகவும் கவலைப்பட்டுக் குரல் கொடுக்கும் எழுத்தே சிறந்த எழுத்து. அந்த வகையில் அடித்தட்டு மக்களுக்காகவும் திருநங்கையருக்காகவும் பரிந்துபேசும்  லதா சரவணனின் எழுத்து, மனித ஈரம் கசியும் எழுத்தாகும். அவர் இதயத்தால் எழுதுகிறவர். அவரது குறுநாவல்கள் மனிதத்தைப் பேசுகின்றன. பெண்ணியம் பேசுகிற சிலர்  கண்ணியம் மீறுகின்றனர்’ என்று சுட்டிக்காட்டினார்.

 

Thoughtful language Tamil! Kodaikanal Gandhi in Lata Saravanan book release function

 

கவிஞர் நாஞ்சில் இன்பாவோ ‘பெண் விடுதலை என்ற பெயரில் இன்று சில பெண் கவிஞர்கள் ஆபாசச் சொற்களைக் கேவலமாகக் கையாளுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் புறக்கணிக்கவேண்டும். எப்படி எழுதவேண்டும் என்பதற்கு லதா சரவணன் உயர்ந்த உதாரணம்’ என்றார் அழுத்தமாக. 

சிந்தனையாளர் கொடைக்கானல் காந்தியோ ‘தமிழ்  மொழி சிந்தனையாளர்களின் மொழி. வள்ளுவன், பூங்குன்றன் தொடங்கி எல்லோரும் சிந்தனையால் தமிழை உயர்த்தினார்கள். லதா சரவணனின் எழுத்தும் சிந்தனையைத் தூண்டும் உயர்ந்த எழுத்துக்களாக இருக்கின்றன. அவரை முதன் முதலில் பார்த்தபோதே, அவரிடம் மகத்தான ஏதோ ஒன்று இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அது மனித நேயமிக்க எழுத்து என்பதைக் கண்டுகொண்டேன்’ என்று அவையைக் கலகலப்பாக்கினார். 

எழுத்தாளர் கமலக்கண்ணன் ‘லதா சரவணனின் உழைப்பு மகத்தானது. அவரது நூல் கலைவடிவம் பெற்று சிறப்பாக மிளிர்கிறது. சாதனைகளால் வியக்க வைக்கிறவர் லதா சரவணன்’ என்று பாராட்டினார்.

 

Thoughtful language Tamil! Kodaikanal Gandhi in Lata Saravanan book release function

 

’வடசென்னைக்கு என்று பெரும் சிறப்பு இருக்கிறது. அதில் ஒன்று லதா சரவணன். அவர் எழுத்து வாழ்க்கையை போதிக்கிறது’ என்று மகிழ்வை வெளிப்படுத்தினார்.

முனைவர் பாட்டழகனும், லதா சரவணனின் எழுத்துக்களைப் பாராட்டிப் பேசினார்.  ”இந்த விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே இது நம் விழா  என்ற எண்ணம் எனக்குள் தோன்றிவிட்டது. அந்த உணர்வோடு  லதா சரவணனைப் பாராட்ட வந்தேன்’ என்றார் எழுத்தாளர் லதா.

விரைவில் வெளியாக இருக்கும்  ’மின் கைத்தடி’ இதழையும் எதிர்பார்ப்போடு அனைவரும் பாராட்டினார். விழாவின் இடையில் அரங்கேறிய லதா சரவணனின் மகள்கள், தங்கள் திடீர் நடனத்தின் மூலம் அரங்கை உற்சாகமாக்கினர்.  ஏற்புரையாற்றிய லதா சரவணன் தன் எழுத்து அனுபவங்களைச் சொன்னதோடு, அப்பா, அம்மா, கணவர், தங்கை, அண்ணி, குழந்தைகள் என சகலரும் தனக்குப் பக்க பலமாக இருப்பதை விவரித்தார். 

பரத மாணவிகளுக்கு விழாக் குழுவினர்  முனைவர் நளினிதேவி  பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். விழாவில் கவிஞர்கள் பெருமாள் ஆச்சியும், அமுதா தமிழ்நாடனும் சிறப்பிக்கப்பட்டனர். மதுரை ’அரிமா’ கார்த்திகேயன், விமலா கார்த்திகேயன், கவிஞர் ஜானு இந்து, காவியா உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். கவித்துவமாக அரங்கேறிய விழா, மனதை இதமாக்கியது.

                                                                                                                  -சூர்யா 

 

சார்ந்த செய்திகள்