கரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கி அதன் காசோலையை தூத்துக்குடி ஆட்சியரிடம் கொடுத்த திமுக எம்.பி. கனிமொழி, தனது தொகுதியில் கரோனா பாதிப்பை தடுக்கும் முகமாக தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கியிருக்கிறார்.
![thoothukudi mp kanimozhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/dCA5O7keQlwVWD-YM9I2KDANjwEj8mMqqY5_pMFtO3g/1585827567/sites/default/files/inline-images/kk21_0.jpg)
இந்த நிலையில், கரோனா பரவுதலை தடுப்பதில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் களப்பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு , கரோனா தாக்காமல் இருக்க, நோய் காக்கும் கவசங்களும், கையுறைகளும், கிருமி நாசினியும் வழங்கினார் கனிமொழி. மேலும், அவர்களும் அவர்களது குடும்பமும் பசியில் தடுமாறாமல் இருக்க ஒவ்வொரு தூய்மைப் பணியாளர் குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி , குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கினார்.
![thoothukudi mp kanimozhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/GkC05yHsBnwBlxGSXEsvnodya4lyBjmPK5VdkwpvjT8/1585827584/sites/default/files/inline-images/kk22.jpg)
முதல் கட்டமாக இன்று ஆறுமுகநேரி பகுதியில் - 40, திருச்செந்தூர்- 88 , உடன்குடி - 50 என மொத்தம் 178 குடும்பங்களுக்கு திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா கிருஷ்ணனுடன் இணைந்து இந்த உதவியை வழங்கியிருக்கிறார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மற்ற பகுதிகளில் இருக்கும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கும் வழங்கப்படவிருக்கிறது. அதற்கேற்ப பயணத்திட்டங்களை வகுத்துள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். இரண்டாம் கட்டமாக, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் வாழ் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கவிருக்கிறார் கனிமொழி.