Skip to main content

பகலில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் திருடர்கள்...கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

தமிழகத்தில் வழிபறி, வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கும், குற்ற சம்பவங்கள் பட்ட பகலிலேயே அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் கடைவீதி அருகே குமுதா என்பவரது வீட்டில் மகன் ராஜ்குமார் மற்றும்  மருமகள் ஆர்த்தி வசித்து வருகின்றனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


இந்நிலையில் ஆர்த்தி பிரசவத்திற்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த தகவலை தெரிந்து கொண்ட திருடர்கள் காலையிலேயே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிலிருந்த 15 பவுன் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்த்தியின் குடும்பத்தினர் கொரடாச்சேரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


இந்த பகுதியில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் புதியது இல்லையாம், தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

thiruvarur thief continue break into houses during the day Unable to find police


தேவர்கண்டநல்லூர் பகுதியில் கொள்ளை நடந்த, அதேநாளில் பட்டப்பகலில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மனோகரன் தனது வளர்ப்பு மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 50 பவுன் நகையையும், 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அக்கிராமத்தினர் கூறுகையில் "குழந்தையில்லாத குறையைப்போக்கவும், ஆதரவற்ற பிள்ளைக்கொரு நல்ல வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்றும் ஆதரவற்ற பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து நல்ல வரன் பார்த்து திருமண ஏற்பாடும் செய்தனர்.

thiruvarur thief continue break into houses during the day Unable to find police



அவர்களுக்கு கள்நெஞ்சம் உள்ளவர்கள் இப்படி செய்து முடக்கி வைத்துவிட்டனர். இதை காவல்துறை உடனே கண்டுபிடித்து கொடுக்கனும்," என்றனர் அக்கிராமத்தினர். இந்த பகுதிகளில் நிகழும் கொள்ளை சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும், திருடர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவும், கொள்ளை போன நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர் அப்பகுதிமக்கள். 



 

சார்ந்த செய்திகள்