Skip to main content

அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருட்டு!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
sellur


திருவண்ணாமலை அருகே அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருடுபோயுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில், மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் புதியதாகக் கூட்டுறவு வங்கிக் கிளை நேற்று திறக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்தார்.

பின்னர் விழா முடிந்ததும் விருந்தினர் மாளிகைக்கு சென்றிருந்த போது அங்கிருந்து அவருடைய செல்போன் திருடு போனது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விசாரணை நடத்தி வருகிறார். முக்கிய எண்கள் அடங்கிய செல்போன் திருடு போனதால் அமைச்சர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்