Skip to main content

இன்னும் ஒரு லட்சம் பேர் ஓட்டுபோட வேண்டி இருக்கு... நாளை தீர்ப்பு ...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் மேலும் ஒரு லட்சம் பேர் வரை ஓட்டுப் போட வேண்டிய நிலை நீடிக்கிறது. யார் அந்த ஒரு லட்சம் பேர்? வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தான் அவர்கள்.  அந்த ஒரு லட்சம் பேரான அவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் உரிமை உள்ளது. ஆனால் அதிகாரிகள் குளறுபடியால் இந்த நிமிடம் வரை தபால் வாக்குகள் அவர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை என்று தெரிகிறது. 

 

 There are more than 1 lakh people to vote ... tomorrow's judgment ...

 

இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர் சங்கம் வழக்கு போட்டது. அதன் தீர்ப்பு நாளை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத காலம் ஆகியும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் உரிமையை முழுமையாக தராமல் இருப்பது ஆளுங்கட்சியின் சர்வாதிகாரம். 

 

 There are more than 1 lakh people to vote ... tomorrow's judgment ...

 

ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் சராசரியாக ஒரு தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள், இந்த வாக்குகள் பெரும்பாலும் இந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையில் விழும் என்பதாகும் இந்த வாக்குகளை புறக்கணிப்பதிலேயே இந்த அரசு கவனம் செலுத்துவதாகவும் ஆகவேதான் இன்னும் ஒரு லட்சம் பேர் வாக்கு செலுத்தாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மாயவன் கூறியுள்ளார்.

 

 

நாளை இதன் தீர்ப்பு வந்த பிறகு அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேரின் வாக்குகள் வாக்குப்பெட்டி வருமா என்பது தெரியும்.

 

 

சார்ந்த செய்திகள்