Skip to main content

சென்னையில் போராடிவரும் செவிலியர்களுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
சென்னையில் போராடிவரும் செவிலியர்களுக்கு ஆதரவாக 
திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 



சென்னையில்  பல்வேறு கோரிக்கைகளோடு  போராட்டம் நடத்தி வரும் செவிலியர் சங்கத்தினருக்கு ஆதரவாக   திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர்  ஆர்பாட்டம் செய்தனர்.

  கடந்த நான்கு நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்திவருகின்றனர் செவிலியர்கள்.  அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுக ஆர்வளகளும் ஆதரவு கரம் நீட்டிவருகின்றனர். இந்தநிலையில் திருவாரூரில் அரசு ஊழியர்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்துள்ளனர்.

 தகுதி தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவத்துறையில் மருத்துவர் உள்ளிட்ட  அனைத்து பணியாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்கிற   மத்திய அரசின் உத்தரவுபடி தமிழக மருத்துவ பணிகள் தேர்வானையமானது  கடந்த 2015 ஏப்ரல் மாதம் முதல் எம்.ஆர்.பி எனப்படும் தகுதி தேர்வின் மூலம்  மருத்துவர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் தேர்வு செய்து வருகிறது.
 
  அதன்படி, நடப்பாண்டு வரையில் சுமார் 11 ஆயிரம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.   அவர்களுக்கு  காலமுறையில் ஊதியம் வழங்குவதற்கு பதில் தொகுப்பூதியமாக ரூ.7 ஆயிரத்து 700 மட்டும் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.  இது சம்மந்தமாக  எம்.ஆர்.பி செவிலியர்கள்  சங்கத்தின்  மூலம் அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
இந்தநிலையில் தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி முதற்கட்டமாக  கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையில்  செவிலியர்கள் அனைவரும் தாங்கள் வேலைப்பார்த்துவரும்  அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை காட்டியபடி பணியில் ஈடுபட்டனர்.  அதற்கும் அரசு முறையான பதில் கொடுக்கவில்லை.

 இந்த சூழலில் தங்களின் கோரிக்கைகளை  முன்வைத்து  சென்னை மருத்துவ இயக்குனர் அலுவலகம் முன்பாக  கடந்த  4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும்   திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    நடைபெற்றது. 

 - க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்