Skip to main content

வேட்பாளர் அறிமுகத்தில் பிரமாண்டத்தை காட்டுகிறதா திருவண்ணாமலை திமுக

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக தனது வேட்பாளராக அண்ணாதுரை என்பவரை நிறுத்தியுள்ளது. இவரை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்துவது மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவற்றின் நிர்வாகிகளை அழைத்து திமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார் திமுக மா.செவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு.

 

v


அதனை தொடர்ந்து மார்ச் 20ந்தேதி, செங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்பாளரை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.


இதுபோன்ற நிகழ்வுகள் திருமண மண்டபங்கள் அல்லது கட்சி அலுவலகத்தில் நடக்கும். ஆனால் செங்கத்தில் மாநாடு போன்று மைதானத்தில் நடைபெற்றது. பெரிய அளவில் மேடையமைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொகுதி முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அறிமுக கூட்டத்துக்கு வந்திருந்தனர்.


திருவண்ணாமலை மாவட்ட திமுக எந்தவொரு கூட்டம் நடத்தினாலும் பெரிய அளவில் மாஸ் இருக்கும், பிரமாண்டமாக நடத்துவார் வேலு என்கிற பெயர் தமிழகம் முழுவதுமே உண்டு. சமீப சில ஆண்டுகளாக அப்படியில்லாமல் அடக்கி வாசித்து வந்தார் வேலு. இந்நிலையில் எம்.பி தேர்தலில் அந்த பிரமாண்டம் மீண்டும் தொடங்கிவிட்டதோ என பிற கட்சியினரை என்ன வைத்துவிட்டது செங்கம் அறிமுக கூட்டம்.


பிரமாண்டத்தை காட்டி எதிராலியை மிரளவைக்கும் திட்டமிது என்கிறார்கள் திமுகவினர். இதனை அதிமுகவும், தேர்தல் அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்