திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் துப்புரவு பணியினை மேற்கொள்வதை தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளனர் அதிகாரிகள். அதோடு, இதுவரை பணி செய்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் 50க்கும் அதிகமானவர்களை பணியை விட்டு நீக்கிவிட்டது பேரூராட்சி நிர்வாகம்.
தனியார் நிறுவனமும் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பந்த பணியாளர்களை முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு கடந்த நான்கு நாட்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பை அள்ளுபவனிடம் நாங்கள் சமாதானம் பேசனுமா என்கிற அதிகாரிகளின் மனநிலையால் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராவிட்டால் குடும்பத்துடன் பட்டினி போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர். இருந்தும் அதிகாரிகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.