திருச்சி எம்.பி. தொகு்தி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் எப்போதும் லேட்டாக தான் பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற புகார் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. கட்சி அலுவலகம் திறப்பு விழா நாள் அன்று திமுக மாவட்ட செயலாளர் நேரு முன்கூட்டியே வந்து திட்டி தீர்த்ததும், அதன் பிறகு அலறி அடித்துக்கொண்டு திருநாவுக்கரசர் வந்ததும். ஆரம்பித்திலே இப்படி லேட்டா வந்தா எப்படி? என்று சலித்துக்கொண்டார். திமுக கட்சியினரோ இப்போ தேவையில்லாம் காங்கிரஸ் வேட்பாளரை சேர்த்து இழுத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று சலித்துக்கொண்டனர்.
இதேபோல ஊழியர் கூட்டம், பொது கூட்டம் பிரச்சாரம் என தொடர்ச்சியாக சரியான நேரத்திற்கு ஆஜர் ஆகாமலே இருப்பது தான் தற்போது திமுக தொண்டர்கள் இடையே பெரிய அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திருநாவுக்கரசர் பிரச்சாரம் செய்தார். மாலை 4 மணிக்கு காட்டூர் வடக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து பிரச்சாரம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என் சேகரன், மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் 4 மணிக்கு வந்து விட்டனர். ஆனால் திருநாவுக்கரசர் 5.50 மணிக்கு தான் வந்தார் .
வந்திருந்த கட்சியினர் வேட்பாளர் வந்ததும் கலைத்து போய் கலைய ஆரம்பித்தனர். ஆனால் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களோ கண்டிப்பா அண்ணன் ஜெயித்திடுவிடுவார். அதுவும் படுத்துக்கொண்டே ஜெயித்திடுவார். அந்த அளவுக்கு ரொம்ப நல்லாயிருக்கு என்கிறார்கள்.
ஆனால் கட்சியினரோ இருக்கிறது 12 நாள் தான் இருக்கும் பிச்சாரம் பண்ண வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு இப்படி பண்ணினா எப்படி என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர்.