திருமுருகன் காந்தி மீதான வழக்கில் புதன்கிழமை விசாரணை
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீது வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்றதாக திருமுருகன் காந்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மே. 23-ம் தேதி கைது செய்யப்பட்டார்.